- மகனை கொஞ்ச காலம் மெல்போர்ன் அழைத்து வரலாம் என திட்டம் ( கூடவே அம்மாவையும் )
- ஒரு வருடப் படிப்பு ஒன்றை படிக்கலாம் என நினைக்கிறேன் .( மண்டையில் ஏறினால் )
- சில நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தெலுங்கு படங்களும் இனி பார்ப்பது என்றிருக்கிறேன் ( சப் டைட்டில் உடன்தான் ...நமக்கு என்னைக்கு தமிழ் தவிர மற்றது தெரிஞ்சுச்சு ) அக்கடு மற்றும் ஒக்கடு ஏற்கனவே கையில் உள்ளது.
- அடிக்கடி இதைப்போல் எதாவது வெட்டியாக எழுத வேண்டும் .
- மே மாதம் ஊருக்கு வரவேண்டும் ( வெயில்தான் கொல்லும்...நம்மூர் வெயிலுக்கு வெயிலான் ,வசந்தபாலன் கூட தப்ப முடியாது ). வேளாங்கண்ணி செல்ல வேண்டும் என மனம் சொல்கிறது.
- கேபிள், பரிசல் , லக்கிலுக்,கார்க்கி,நரசிம் , அப்துல்லா உட்பட சில பதிவர்களையாவது நேரில் சந்திக்க வேண்டும் ( எவ்வளவு நாளைக்குத்தான் இணையத்திலேயே ஆச்சரியப்படுவது)
- ஒரு பதிவர் சந்திப்பிலாவது முட்டி மோதி உள்ளே நுழைவது ...( அதற்குள் நானும் ஒரு பதிவர் எனும் தகுதியைப்பெற முயற்ச்சிக்கிறேன்)
- மனமும் (மனைவியின்) , பணமும் ஒத்துவந்தால் ஏதாவது தெரியாத தொழிலில் தலையை நுழைப்பது..
- நடைப்பயிர்சசியில் கொஞ்சம் வெயிட் குறைப்பது ( இதை மட்டும் மூன்றாவது வருடமாக முன்னோக்கிப் பார்க்கிறேன். அடுத்த வருடமாவது இதை திரும்பிப் பார்க்க முயல்கிறேன்)
- இந்த ஆண்டாவது மெல்போர்ன் அமைந்திருக்கும் விக்டோரியா மாநிலத்தை சுற்றிப் பார்ப்பது
- இதுல பாதிய பண்ணுனாலே பெரிய விஷயம்தான் .