நான் பள்ளியில் படித்த காலத்தில் என் உடன் படித்த நண்பர்களையும் நான் வசித்த அதே தெருவில் அல்லது ஊரில் உள்ள நண்பர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முடியுமா என யோசிக்கிறேன். நம் கல்லூரி நண்பர்கள் & வேலை மூலம் கிடைத்த நண்பர்கள் , அவர்கள் மூலம் கிடைத்த நண்பர்கள் என்று நம் நட்பு சதுரம் ( அதென்ன எப்பொழுதும் வட்டம்) பெரியது என்றாலும் , பால்ய காலத்து நண்பர்கள் நினைவு ஒரு பசுமையானது, ஒரு காலத்தும் மறக்க இயலாதது. சின்ன வயதில் நோட்டு புஸ்தகத்தை கிழித்ததினலோ, பென்சில் தராததாலோ, பம்பரத்தில் ஆக்கர் போட்டதினலோ, கோலி குண்டை உடைத்ததலோ, ஏதாவது காரணத்துக்காக டீச்சரிடம் மாட்டி விட்டிருந்தாலோ என்னை மன்னித்து விட்டு தொடர்பு கொள்ளவும்.
முதலில் என்னுடன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள T.E.L.C. நடுநிலை பள்ளியில் படித்த மற்றும் வடுகர் தெருவில் என்னுடன் வாசித்த நண்பர்கள் ....
குமரேசன் ...
உடன் படித்த எங்களுடன் வயது ஒன்று அல்லது இரண்டு கூட இருக்கும் இவருக்கு ... அப்போது அக்ரகாரத்தில் வசித்து கொண்டிருந்தார். அப்பா கஸ்டம்சில் ஹவில்தார் ஆக இருந்தார். சத்தியமாக ஹவில்தார் என்றால் என்ன என்று தெரியாது. குமரேசன் எட்டாம் வகுப்பு வரை என்னுடன் படித்தார். அம்மா குறித்த நினைவுகள் இல்லை. என் நினைவில் இவருடன் சண்டை போட்டதே இல்லை. வயது ஒரு காரணம். என்னை தொடர்பு கொள்ள rajah_6@yahoo.com க்கு ஒரு மெயில் அனுப்பவும் .நன்றி