Sunday, April 24, 2011

MADURAI NEWS

நவம்பர் மாதம் ஊருக்கு வந்த போது எங்கு திரும்பினாலும் அழகிரி மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் பேனர்கள் மதுரையை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தன. அவர் மகன் கல்யாணம் வேறு அச்சமயம்  இருந்ததால் மதுரையே பிதுங்கி விட்டது. என் தம்பி சொன்னான்.

" அடுத்த வருஷம் அழகருக்கு பதிலா அழகிரிதான் அண்ணே ஆத்துல இறங்க போறாரு "
நான் கேட்டேன்  
ஆத்துல இறங்க போறாரா இல்ல ஆட்சிய விட்டு இறங்க போறாரான்னு. 

பேப்பர் வாசித்ததில் அழகிரி ஆற்றில் இறங்கவில்லை என்று உறுதியாகிவிட்டது. ஆட்சியைப்பற்றி தெரிந்து  கொள்ள இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்...


Saturday, April 23, 2011

FRIENDS

நான் பள்ளியில் படித்த காலத்தில் என் உடன் படித்த நண்பர்களையும் நான் வசித்த அதே தெருவில் அல்லது ஊரில் உள்ள நண்பர்களை மீண்டும் தொடர்பு கொள்ள முடியுமா என யோசிக்கிறேன். நம் கல்லூரி நண்பர்கள் & வேலை மூலம் கிடைத்த நண்பர்கள் , அவர்கள் மூலம் கிடைத்த நண்பர்கள் என்று நம் நட்பு சதுரம் ( அதென்ன எப்பொழுதும் வட்டம்) பெரியது என்றாலும் , பால்ய காலத்து நண்பர்கள் நினைவு ஒரு பசுமையானது, ஒரு காலத்தும் மறக்க இயலாதது. சின்ன வயதில் நோட்டு புஸ்தகத்தை கிழித்ததினலோ, பென்சில் தராததாலோ, பம்பரத்தில் ஆக்கர் போட்டதினலோ, கோலி குண்டை உடைத்ததலோ, ஏதாவது காரணத்துக்காக டீச்சரிடம் மாட்டி விட்டிருந்தாலோ என்னை மன்னித்து விட்டு தொடர்பு கொள்ளவும். 
முதலில் என்னுடன் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள T.E.L.C. நடுநிலை பள்ளியில் படித்த மற்றும் வடுகர் தெருவில் என்னுடன் வாசித்த நண்பர்கள் ....

குமரேசன் ...

உடன் படித்த எங்களுடன் வயது ஒன்று அல்லது இரண்டு கூட இருக்கும் இவருக்கு ... அப்போது  அக்ரகாரத்தில்  வசித்து கொண்டிருந்தார். அப்பா கஸ்டம்சில் ஹவில்தார் ஆக இருந்தார். சத்தியமாக ஹவில்தார் என்றால் என்ன   என்று  தெரியாது. குமரேசன் எட்டாம் வகுப்பு வரை என்னுடன் படித்தார். அம்மா குறித்த நினைவுகள் இல்லை. என் நினைவில் இவருடன் சண்டை போட்டதே இல்லை. வயது ஒரு காரணம். என்னை தொடர்பு கொள்ள rajah_6@yahoo.com  க்கு ஒரு மெயில் அனுப்பவும் .நன்றி 

Wednesday, February 3, 2010

Books to be published from cable and parisal brothers

ஹாய் எல்லோருக்கும் வணக்கம்
ரொம்ப நாளாச்சு எழுதி என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதுதான் கேபிள் அண்ணனிடமிருந்து ஒரு இ மெயில் .....புத்தக வெளியீடு குறித்து ....
இந்தாங்கோ லிங்கைப் புடிங்கோ








விவரங்களுக்கு 'கிளிக்'கவும்



விவரங்களுக்கு 'கிளிக்'கவும்

Tuesday, January 5, 2010

2010 - முன்னோக்கிப் பார்க்கிறேன்

2010 - என்ன செய்யலாம்


  • மகனை கொஞ்ச காலம் மெல்போர்ன் அழைத்து வரலாம் என திட்டம் ( கூடவே அம்மாவையும் )

  • ஒரு வருடப் படிப்பு ஒன்றை படிக்கலாம் என நினைக்கிறேன் .( மண்டையில் ஏறினால் )

  • சில நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தெலுங்கு படங்களும் இனி பார்ப்பது என்றிருக்கிறேன் ( சப் டைட்டில் உடன்தான் ...நமக்கு என்னைக்கு தமிழ் தவிர மற்றது தெரிஞ்சுச்சு ) அக்கடு மற்றும் ஒக்கடு ஏற்கனவே கையில் உள்ளது.

  • அடிக்கடி இதைப்போல் எதாவது வெட்டியாக எழுத வேண்டும் .

  • மே மாதம் ஊருக்கு வரவேண்டும் ( வெயில்தான் கொல்லும்...நம்மூர் வெயிலுக்கு வெயிலான் ,வசந்தபாலன் கூட தப்ப முடியாது ). வேளாங்கண்ணி செல்ல வேண்டும் என மனம் சொல்கிறது.

  • கேபிள், பரிசல் , லக்கிலுக்,கார்க்கி,நரசிம் , அப்துல்லா உட்பட சில பதிவர்களையாவது நேரில் சந்திக்க வேண்டும் ( எவ்வளவு நாளைக்குத்தான் இணையத்திலேயே ஆச்சரியப்படுவது)

  • ஒரு பதிவர் சந்திப்பிலாவது முட்டி மோதி உள்ளே நுழைவது ...( அதற்குள் நானும் ஒரு பதிவர் எனும் தகுதியைப்பெற முயற்ச்சிக்கிறேன்)


  • மனமும் (மனைவியின்) , பணமும் ஒத்துவந்தால் ஏதாவது தெரியாத தொழிலில் தலையை நுழைப்பது..



  • நடைப்பயிர்சசியில் கொஞ்சம் வெயிட் குறைப்பது ( இதை மட்டும் மூன்றாவது வருடமாக முன்னோக்கிப் பார்க்கிறேன். அடுத்த வருடமாவது இதை திரும்பிப் பார்க்க முயல்கிறேன்)



  • இந்த ஆண்டாவது மெல்போர்ன் அமைந்திருக்கும் விக்டோரியா மாநிலத்தை சுற்றிப் பார்ப்பது



  • இதுல பாதிய பண்ணுனாலே பெரிய விஷயம்தான் .

Sunday, January 3, 2010

பிரமிப்பான ஒரு காட்சி

கிறிஸ்துமஸ் டின்னருக்காக நண்பர்கள் வீட்டிற்கு சென்ற பொழுது , எல்லாரும் சமையலில் ஈடுபட்டிருந்த வேளையில் நண்பர் ஒருவருடைய லேப்டாப்பில் ஒரு படத்தின் காட்சியோடு நிறுத்தி வைத்திருந்தனர். நான் என்ன படம் என்று கேட்கஅது ஒரு ஸ்பானிஷ் அல்லது பிரெஞ்சு படமாக இருக்கலாம் எனக் கூறியவர் அந்தப் படத்தில் வந்த ஒரு சேஸிங்சீனை தட்டிவிட்டார் . பார்த்ததும் 'அட' போடத் தோன்றியதுமல்லாமல்பிரமிப்பும் கூடியது . கீழே பாருங்கள்...



http://www.youtube.com/watch?v=1mpd8H1dRs4



பார்த்துவிட்டு சொல்லுங்கள் இது உண்மையா அல்லது மாயையா என்று ...



Monday, December 28, 2009

2009 - திரும்பிப் பார்க்கிறேன்

  • 2009 - திரும்பிப் பார்க்கிறேன்
    ( அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ... நீ முன்னாடி பார்த்தாலே போதும் என்பவர்களுக்கு அதை புத்தாண்டு வாழ்த்துக்களாக எடுத்துக் கொள்வேன் . இந்த ப்ளோக்கை எப்படியாவது எழுதிப்புடனும்னு லுங்கி கட்டி( கங்கணம் கட்டி ரொம்ப நாளாச்சுல்ல ...அதான் ) இறங்கியிருக்கேன்.


  • ஜனவரி & மே மாதங்களில் இந்தியா வந்தேன் . இது ஒரு பெரிய விஷயமாஎன்றால் ஆம் ... ஜனவரியில் கிறிஸ்துமஸ் & நியூ யிரையொட்டி முதல் முறையும் பின்பு மகனின் முதல் பிறந்த நாளுக்காக மே மாதமும்.....வருடம் ஒரு முறைதான் இந்தியா போக முடியும் என மனைவியிடம் சொன்ன நானே இந்த ஒரு முறை மட்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கினேன்.



  • மே மாதம் வந்தசமயம் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது ரொம்ப பதறி விட்டேன் . மனைவியும் குடும்பத்தாரும்தான் ரொம்ப உறுதுணையாக இருந்தார்கள்.( விஷயம் நடந்தபோது தம்பிகள் உடனில்லையாதலால் நான்தான் ஓவராக பயந்துவிட்டேன்)



  • சின்னதம்பிக்கு (பிரபுவுக்கு அல்ல ) ஒரு பல்சர் 150 வாங்கிக் கொடுத்தேன்.


  • புதிதாக ஒரு லோன் எடுத்துள்ளேன் ( கிழிஞ்சிது ...போ.. இதையெல்லாம் திரும்பிப் பார்க்காமல் அடைக்கப் பாருடா ஆனியன் என்று சொல்வது காதில் தேனாக பாயுது..)



  • கேபிள் சங்கர் , பரிசல் , லக்கிலுக்,ஹாலிவூட் பாலா ஆகியோரை இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்தும், கார்க்கி, அதிஷா, பட்டர்பிளை, நரசிம், அப்துல்லா ஆகியோரை இடையில் இருந்தும் வாசிக்கத் தொடங்கியுள்ளேன் . இன்னும் சில வலைப்பதிவர்களையும் இடையிடையே வாசிக்கிறேன்.


  • ஒரு ப்ளோக்கை தொடங்கி மெதுவாக சிறிய பத்திகளாக எழுத ஆரம்பித்திருக்கிறேன் .


  • காரை மாற்றி விட்டேன்


  • தற்காலிக வேலையை விட்டுவிட்டு நிரந்தர வேலைக்கு மாறியுள்ளேன் ( அதுவும் துணை மேலாளராக ...தலையில கொட்டுங்க பெருமையடிக்கிராயா ராஸ்கல் . எவ்வளவு கஷ்ட்டப்பட்டு எழுதினாலும் 'ர' தப்பாயுடுச்சே ...)


  • 100 - 200 ஆங்கில படங்களும் 5-10 தமிழ் படங்களும் பார்த்திருப்பேன். வலைப்பதிவுலக நண்பர்களின் விமர்சனங்களைப் படித்துவிட்டு நல்லதாக மட்டுமே தமிழ் படங்களை பார்க்கிறேன்( குறிப்பாக கேபிள் அண்ணனுக்கு நன்றி..இவர் விமர்சனம் படிக்காமல் படம் பார்த்து நேரத்தை வீணடித்து மன சஞ்சலப்படுவதில்லை)
  • புது தமிழ் நண்பர்கள் சிலர் மெல்போனில் கிடைத்துள்ளனர்.
  • வேற ஒன்னும் இல்லீங்க ... இருந்தால் 2010 இல் திரும்பிப் பார்த்துக்கிறேன். எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
















































Sunday, December 27, 2009

கிறிஸ்துமஸ்

கடந்த நான்கு வருடங்களில் இந்த வருடம் கிறிஸ்துமசுக்கு ஊருக்கு வர முடியாதது மிக மிக வருத்தமாக இருந்தது. நானும் என் மனைவியும் மட்டும் சர்ச்சுக்கு போய்விட்டு வந்தோம். டின்னருக்கு நண்பர்கள் வீட்டுக்கு சென்றோம் .
வழக்கம் போல ஊருக்கு போன் போட்டு அவர்கள் எல்லாம் எப்படி கொண்டாடுகிறார்கள் என்று கேட்டுகொண்டோம். இந்த மாதிரி நேரங்களில்தான் அயல்நாடுகளில் பணிபுரிவதில் உள்ள வேதனையும் , நம்முடைய இயலாமையும் நரக வேதனையை தரும். என் மனைவி அழுதே விட்டார்.
அடுத்த ஆண்டு எப்படியும் போய்விடலாம் என்று பிளான் பண்ணியுள்ளேன்.
பாப்போம் ..என்ன நடக்கப் போகுதென்று ....

மற்றபடி எல்லோருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ..
2010 எல்லோருக்கும் ஒரு நல்ல ஆண்டாக அமைய வேண்டுவோம் .