Tuesday, January 5, 2010

2010 - முன்னோக்கிப் பார்க்கிறேன்

2010 - என்ன செய்யலாம்


  • மகனை கொஞ்ச காலம் மெல்போர்ன் அழைத்து வரலாம் என திட்டம் ( கூடவே அம்மாவையும் )

  • ஒரு வருடப் படிப்பு ஒன்றை படிக்கலாம் என நினைக்கிறேன் .( மண்டையில் ஏறினால் )

  • சில நண்பர்கள் ஊக்கப்படுத்தியதால் தெலுங்கு படங்களும் இனி பார்ப்பது என்றிருக்கிறேன் ( சப் டைட்டில் உடன்தான் ...நமக்கு என்னைக்கு தமிழ் தவிர மற்றது தெரிஞ்சுச்சு ) அக்கடு மற்றும் ஒக்கடு ஏற்கனவே கையில் உள்ளது.

  • அடிக்கடி இதைப்போல் எதாவது வெட்டியாக எழுத வேண்டும் .

  • மே மாதம் ஊருக்கு வரவேண்டும் ( வெயில்தான் கொல்லும்...நம்மூர் வெயிலுக்கு வெயிலான் ,வசந்தபாலன் கூட தப்ப முடியாது ). வேளாங்கண்ணி செல்ல வேண்டும் என மனம் சொல்கிறது.

  • கேபிள், பரிசல் , லக்கிலுக்,கார்க்கி,நரசிம் , அப்துல்லா உட்பட சில பதிவர்களையாவது நேரில் சந்திக்க வேண்டும் ( எவ்வளவு நாளைக்குத்தான் இணையத்திலேயே ஆச்சரியப்படுவது)

  • ஒரு பதிவர் சந்திப்பிலாவது முட்டி மோதி உள்ளே நுழைவது ...( அதற்குள் நானும் ஒரு பதிவர் எனும் தகுதியைப்பெற முயற்ச்சிக்கிறேன்)


  • மனமும் (மனைவியின்) , பணமும் ஒத்துவந்தால் ஏதாவது தெரியாத தொழிலில் தலையை நுழைப்பது..



  • நடைப்பயிர்சசியில் கொஞ்சம் வெயிட் குறைப்பது ( இதை மட்டும் மூன்றாவது வருடமாக முன்னோக்கிப் பார்க்கிறேன். அடுத்த வருடமாவது இதை திரும்பிப் பார்க்க முயல்கிறேன்)



  • இந்த ஆண்டாவது மெல்போர்ன் அமைந்திருக்கும் விக்டோரியா மாநிலத்தை சுற்றிப் பார்ப்பது



  • இதுல பாதிய பண்ணுனாலே பெரிய விஷயம்தான் .

2 comments:

  1. எண்ணியவெல்லாம் நிறைவு பெற வாழ்த்துக்கள்.

    கேபிள் சங்கர்

    ReplyDelete
  2. கேபிள், பரிசல் , லக்கிலுக்,கார்க்கி,நரசிம் , அப்துல்லா உட்பட சில பதிவர்களையாவது நேரில் சந்திக்க வேண்டும் ( எவ்வளவு நாளைக்குத்தான்
    READ
    http://venpu.blogspot.com
    http://surekaa.blogspot.com

    ReplyDelete