- 2009 - திரும்பிப் பார்க்கிறேன்
( அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ... நீ முன்னாடி பார்த்தாலே போதும் என்பவர்களுக்கு அதை புத்தாண்டு வாழ்த்துக்களாக எடுத்துக் கொள்வேன் . இந்த ப்ளோக்கை எப்படியாவது எழுதிப்புடனும்னு லுங்கி கட்டி( கங்கணம் கட்டி ரொம்ப நாளாச்சுல்ல ...அதான் ) இறங்கியிருக்கேன்.
- ஜனவரி & மே மாதங்களில் இந்தியா வந்தேன் . இது ஒரு பெரிய விஷயமாஎன்றால் ஆம் ... ஜனவரியில் கிறிஸ்துமஸ் & நியூ யிரையொட்டி முதல் முறையும் பின்பு மகனின் முதல் பிறந்த நாளுக்காக மே மாதமும்.....வருடம் ஒரு முறைதான் இந்தியா போக முடியும் என மனைவியிடம் சொன்ன நானே இந்த ஒரு முறை மட்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி அனுமதி வாங்கினேன்.
- மே மாதம் வந்தசமயம் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போன போது ரொம்ப பதறி விட்டேன் . மனைவியும் குடும்பத்தாரும்தான் ரொம்ப உறுதுணையாக இருந்தார்கள்.( விஷயம் நடந்தபோது தம்பிகள் உடனில்லையாதலால் நான்தான் ஓவராக பயந்துவிட்டேன்)
- சின்னதம்பிக்கு (பிரபுவுக்கு அல்ல ) ஒரு பல்சர் 150 வாங்கிக் கொடுத்தேன்.
- புதிதாக ஒரு லோன் எடுத்துள்ளேன் ( கிழிஞ்சிது ...போ.. இதையெல்லாம் திரும்பிப் பார்க்காமல் அடைக்கப் பாருடா ஆனியன் என்று சொல்வது காதில் தேனாக பாயுது..)
- கேபிள் சங்கர் , பரிசல் , லக்கிலுக்,ஹாலிவூட் பாலா ஆகியோரை இந்த வருடத்தின் தொடக்கத்திலிருந்தும், கார்க்கி, அதிஷா, பட்டர்பிளை, நரசிம், அப்துல்லா ஆகியோரை இடையில் இருந்தும் வாசிக்கத் தொடங்கியுள்ளேன் . இன்னும் சில வலைப்பதிவர்களையும் இடையிடையே வாசிக்கிறேன்.
- ஒரு ப்ளோக்கை தொடங்கி மெதுவாக சிறிய பத்திகளாக எழுத ஆரம்பித்திருக்கிறேன் .
- காரை மாற்றி விட்டேன்
- தற்காலிக வேலையை விட்டுவிட்டு நிரந்தர வேலைக்கு மாறியுள்ளேன் ( அதுவும் துணை மேலாளராக ...தலையில கொட்டுங்க பெருமையடிக்கிராயா ராஸ்கல் . எவ்வளவு கஷ்ட்டப்பட்டு எழுதினாலும் 'ர' தப்பாயுடுச்சே ...)
- 100 - 200 ஆங்கில படங்களும் 5-10 தமிழ் படங்களும் பார்த்திருப்பேன். வலைப்பதிவுலக நண்பர்களின் விமர்சனங்களைப் படித்துவிட்டு நல்லதாக மட்டுமே தமிழ் படங்களை பார்க்கிறேன்( குறிப்பாக கேபிள் அண்ணனுக்கு நன்றி..இவர் விமர்சனம் படிக்காமல் படம் பார்த்து நேரத்தை வீணடித்து மன சஞ்சலப்படுவதில்லை)
- புது தமிழ் நண்பர்கள் சிலர் மெல்போனில் கிடைத்துள்ளனர்.
- வேற ஒன்னும் இல்லீங்க ... இருந்தால் 2010 இல் திரும்பிப் பார்த்துக்கிறேன். எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.