காத்திருந்து காத்திருந்து கடைசியில் வேட்டைக்காரன் ரிலீஸ் ஆகி ,நான் கேபிள் அண்ணா விமர்சனம் படித்து பின்னூட்டமும் போட்டு விட்டேன் . நான் எதிர்பார்த்த மாதிரியே ஆகிவிட்டது. அநேகமாக வரும் பொங்கல் தினம் டிவி சேனல்களில் பட்டிமன்ற தலைப்பு இதுவாகத்தான் இருக்கும். நடிகர் விஜய் இனியாவது திருந்துவாரா? மாட்டாரா ?
மெல்போர்னில் தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகும்போது அல்லது முன்பே எனக்கு sms அல்லது மெயில் வந்துவிடும் . அப்படித்தான் சிவாஜி , ஆதவன் எல்லாம் போனோம் . என் நல்ல காலம் இந்தமுறை எனக்கு தகவல் எதுவும் வரவில்லை. 50 டாலர் மிச்சம் .( மனைவி திட்டிளிருந்தும் தப்பித்தேன் )
விஜய் படங்களில் நான் கடைசியாக முழு படமும் பார்த்தது கில்லி தான் .முதல் இரண்டு சீனோடு ATM முடித்து விட்டேன். பாதாள சாக்கடையிலிருந்து விஜய் தாவி வருவாரே , அதோடு குருவி முடிந்தது . வில்லு ஞாபகம் இல்லை , இரண்டோ அல்லது மூன்றோ சீன்தான் . வேட்டைக்காரன் பார்க்க போவது இல்லை என்று தீர்மானித்து விட்டேன்.
இவர் படத்தின் கதையை கேட்பாரா இல்லை பஞ்ச் டயலாக் மற்றும் பாடல்களை மட்டும் கேட்பாரா என விளங்கவில்லை .ஒரு பெரிய மாஸ் ஹீரோ இப்படியா வரிசையாக தோல்வி படங்களை கொடுப்பது. (நான் தோல்வி என்பது திரைகதையில் . வசூலில் வேண்டுமானால் வெற்றி என கொள்ளலாம் ) இவரே முழு காரணம் இல்லையானாலும் கணிசமான அளவு இவர்தான் காரணம். அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியானதா என்று தெரியவில்லை .பொறுத்திருந்து பார்ப்போம் .
No comments:
Post a Comment